வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானத்துடன் சென்ற இருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் தனிமைப்படுத்தலுடன் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம், வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மதுபானம் வழங்குவதற்காக இருவர் சென்றுள்ளனர்.இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (17) மல்லாகம் நீதிமன்றிலே முற்படுத்தியவேளை நீதிமன்றினால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.