தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளருக்கு பிணை!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீவிபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த கப்பலின் தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் சஞ்சீவ லங்காபிரிய சமரநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதை அடுத்து கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிமதி தமித் தொட்டவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

 

அதனடிப்படையில் சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சந்தேக நபர்கள் வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...