இன்று ஷானி அபேயசேகர தனது 35 வருட சேவையிலிருந்து ஒய்வு பெற்று செல்கிறார்.இலங்கையின் பொலிஸ் சேவைக்கு மகத்தான பங்களிப்பைச் செய்து குற்றவியல் துறைக்கு கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்த சிறந்த அதிகாரியாவார்.
அவருடையஒய்வு வாழ்விற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். நேற்று அவருடைய பிறந்த நாள்.இன்று வரும் போது அவருடைய உயிருக்கு ஆபத்துள்ளதான ஓர் செய்தி ஒன்றை கேள்விப்பட்டேன்.
நாட்டின்தற்போதுள்ள சட்டம் மற்றும் ஒழுங்குகள் குறித்து இங்கு தீர்வுகளை முன்வைக்க நான் விரும்பவில்லை.அது குறித்த தீர்வுகளை வழங்கும் பெறுப்பை மக்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.
சம்பிரதாய எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கப்பால் அர்ப்ப நோக்குகளுக்கு அப்பால் செயற்படுவதற்கு எமது கட்சியின் முன்னோடிகள் தீர்மானித்துள்ளனர்.
எமதுமுதலாவது இலக்கு நாட்டு மக்களாகும்.ரோசாப்பூக்களைக் கொண்ட காலம் அல்ல எமது நாட்டின் எதிர்காலம்,மாறாக இன்று கடினமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது.ஐக்கிய மக்கள் சக்தி இந் நாட்டிலுள்ள பல புத்திஜீவிகள்,துறை சார்ந்தவர்கள்,தொழில்வள்ளுனர்கள்,இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டு பூத்திஜீவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பல குழுக்களை அமைத்துள்ளோம்.
விருப்பமுள்ள ,ஆர்வமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் குறித்து விழிப்பாக இருப்பதோடு எதிர்காலத்தி்ல் ஆட்சியமைக்கவுள்ள பிரதான எதிர்க்கட்சியாக பல்வேறு மாற்றீடுகள் பற்றியும் கலந்தாலோசித்து வருகின்றோம்.
அந்த வகையில் வர்த்தகக்குழுவில் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் எரான் விக்ரம ரத்னவும் செயற்படுகின்றனர்.
பலவேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.