நாட்டின் பல பாகங்களிலும் இன்று(11) பலத்த காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் கடுமையான காற்றுவீசக்கூடும்.
அதேநேரம், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வலுவான காற்று வீசும்.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.