அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணான வகையில் பதுளை மாவட்டத்தின் பொரலந்தை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய குற்றச்சாட்டில் இவ்விருவரையும் கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.