நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம்!

Date:

நேற்றைய தினம் (25) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 360 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

 

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 256 பேரும் மற்றும் களுத்துறையில் 139 பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

 

மேலும் காலியில் 172 பேருக்கும், அம்பாறையில் 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதனடிப்படையில் நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,666 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அத்துடன் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 10 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...