“பன்சலைகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் பாலம் அமைப்போம்” BRIDGES என்ற தொனிப்பொருளிலான விஷேட வேலைத்திட்டங்களை நாடுமுழுவதிலும் எடுத்துச் செல்லும் எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி கலந்துரையாடல் இன்று (12/07/2021) புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சில் பிரதமரின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி அங்ரஹரே கஸ்ஸப நாயக தேரர் அவர்களுடைய காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தின் பிரதான சங்கநாயக்க வன.கலாநிதி அக்விமன தயாரத்ன நாயக தேரர் மற்றும் பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பொறுப்பான இணைப்பாளர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.