பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்

Date:

நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், 2021 ஜூலை 26 முதல் 2021 ஜூலை 30 வரையிலான காலப்பகுதியில் இணைய வழி (online) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க சந்தரப்பம் வழங்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலுமத, இக்காலப்பகுதியில் ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு அடுத்து வரும் இரு வார காலப்பகுதியில் தமது பாடநெறித் தெரிவை மீள ஒழுங்குபடுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 31 முதல் ஓகஸ்ட் 14 வரை இச்சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஆைணைக்குழு அறிவித்துள்ளது

விண்ணப்பத்திற்கான இணைப்பு 26 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...