புதிய உலக சாதனையை நிலைநாட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் பாபர் அசாம் …!

Date:

இங்கிலாந்துக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

மூன்று போட்டிகளிலும் மிக அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி
தொடரை 3-0 என வெற்றிகொண்டது. முதல் இரு ஆட்டங்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறிய பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் இறுதி ஒரு நாள் போட்டியில் அபாரமாக திறனை வெளிப்படுத்த 331 ஓட்டங்கள் பாகிஸ்தான் அணியால் குவிக்கப்பட்டது.

இதிலே பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 158 ஓட்டங்களை விளாசினார், இந்த ஓட்ட எண்ணிக்கை மூலமாக 14வது சதம் கடந்தார். உலக கிரிக்கெட் அரங்கில் விரைவாக 14 சதங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையும் பாபர் அசாம் வசமானது.

ஏற்கனவே 84 இன்னிங்ஸ்களில் 14 சதம் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது, அம்லாவிடமிருந்த இந்த உலக சாதனையை நேற்று 81-வது இன்னிங்சில் பாபர் அசாம் தனது 14 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 103 ஆவது இன்னிங்சில் 14ஆவது சதத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், டி.20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத இயன் மோர்கன் உட்பட இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

டி.20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இயன் மோர்கன், மொய்ன் அலி, ஜானி பாரிஸ்டோ, டாம் பாண்டன், ஜாஸ் பட்லர், டாம் கர்ரான் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். அதே போல் ஒருநாள் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லீவிஸ், ஜேக் பால், ஷாகிப் மஹ்மூத் மற்றும் மேட் பார்கின்சன் போன்ற இளம் வீரர்களுக்கும் டி.20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே வேளையில், இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய அணியை வைத்தே பாகிஸ்தானை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸிற்கு டி.20 தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோக்ஸுடன் சேர்த்து சாம் கர்ரான், மார்க் வுட், கிரிஸ் வோக்ஸ் போன்ற வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியாளரான கிரிஸ் சில்வர்வுட்டிற்கும் ஓய்வு வழங்கப்பட்டு, பவுல் காலிங்வுட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி;

இயன் மோர்கன் (கேப்டன்), மொய்ன் அலி, ஜானி பாரிஸ்டோ, ஜேக் பால், டாம் பாண்டன், ஜாஸ் பட்லர், டாம் கர்ரான், லீவிஸ் க்ரேகரி, கிரிஸ் ஜோர்டன், லியம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், மேட் பார்கின்சன், அடில் ரசீத், ஜேசன் ராய், டேவிட் வில்லே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (16) முதலாவது டி 20 போட்டி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...