இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் மக்கா, மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் ஆம்புலேட்டரி சேவைகளை வழங்க சவூதி ரெட் கிரசண்ட் ஆணையத்தின் (எஸ்.ஆர்.சி.ஏ) 300 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் களமிறங்கியுள்ளாரர்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் தொடர்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்களைச் சமாளிக்க சிறப்பு பயிற்சி பெற்ற அணிகள், யாத்ரீகர்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு வருபவர்களிடையே வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.