முன்மாதிரியான சமூகத் தலைவர்களை உருவாக்கும் ஸம் ஸம் அமைப்பின் EYLF திட்டம் ஆரம்பம்!

Date:

முன்மாதிரியான சமூகத் தலைவர்களை உருவாக்குவதற்கான களமாக ஸம் ஸம் அமைப்பினால் EYLF புலமைப் பரிசில் திட்டம் உருவாக்கப்பட்டது.இது இலங்கையின் பல்லின சமூக மட்டத்தில் மாற்றத்தை உருவாக்கும் திறமையான இளைஞர்களை தேசிய அளவில் அவர்களுடைய பங்களிப்பினை வெளிக் கொண்டு வரும் திட்டத்தின் ஆரம்பமாகவே கடந்த 23-25ம் திகதி கொழும்பு மன்டரினா ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் சமூக ஊடகங்கள் தொடர்பான அறிவூட்டல் மற்றும் சவால்கள், முகநூல் பாதுகாப்பு, சமூக செய்தி தொடர்பாளரின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும், இலங்கை அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் , சிவில் கடமைகள் ,பொறுப்புகள் , தகவல் அறியும் உரிமை சட்டம் , தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள், வாழ்க்கை திறன், ஒன்லைன் பாதுகாப்பு பற்றிய விடயங்கள் ஆராயப்பட்டது.இதில் விரிவுரையாளராக கலாநிதி ரங்கா கலன் சூரியா(Regional Advisor for Asia, IMS-Denmark), வழக்கறிஞர்களான(Attorney at law) ஷிராஸ் நூர்தீன், ருஷ்தி ஹபீப் மற்றும் நல்லையா அசோக்பரன் உட்பட தரிந்து ஜயவர்தன (founder of MediaLK), பிரசாத் பேரேரா(Award winning digital security consultant and strategist) ,முன்ஷிப் ஹூசைன் (corporate trainer and motivator) ,செனல் வன்னியாராச்சி (Director of Hashtag Generation),செனுர அபேவர்த்தன ( public policy manager of Facebook) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி யூசுப் ஹனீபா மற்றும் சில முன்னனி சமூகத் தலைவர்கள் அவர்களுடைய கருத்துக்களையும் , அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

 

EYLF திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 16-30 வயதுக்கு இடைப்பட்ட 19ஆண் மற்றும் 15 பெண் இளம் தலைவர்கள் பல்வேறு தொழில் முறை மற்றும் கல்விப் பின்னணியிலிருந்து வருகை தந்திருந்தினர்.அவர்கள் அடுத்த 10 மாதங்களில் இச் செயல்முறைகளை மேற்கொள்வார்கள்.பங்கேற்பாளர்கள் தங்களுடைய எதிர்கால திட்டங்களையும் , ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸம் ஸம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இந் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை போற்றத்தக்கது.இனி வரும் 10மாதங்களுக்கு இத் திட்டத்தின் பாடநெறிகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...