முன்மொழியப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டம் இலவச கல்விக்கு ஒரு மரண அடியாகும்-சஜித் பிரேமதாச!

Date:

நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வலுப்படுத்தப்படுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

அதனை தேசிய தேவைப்பாடாகவும் கருதுகின்றோம்.எவ்வாறாயினும், பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகி, தற்போதுள்ள இலவசக் கல்வி அழிந்து போவதையும் உயர்கல்வியின் கட்டமைப்பிற்கு வெளியே நிறுவனங்கள் நிறுவுவதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இச் செயல்பாட்டில், உயர் கல்வியின் குணாம்சங்கள், தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆதிக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, இலவசக் கல்வி கடுமையான நெருக்கடியில் தள்ளப்படும்.

 

அதே நேரத்தில், அரசாங்கத்தின் இந்தச் செயலினால் பல்கலைக்கழக முறைமையின் அறிவுசார் சுதந்திரம் சுயாதீனத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதுடன் இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உயர் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கும்.

 

எனவே இலவசக் கல்வி மற்றும் அதன் மரபுரிமையாளர்களின் சுதந்திரத்திற்காக போராட்டங்கள் மூலம் முன்மொழியப்பட்ட சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாம் செயற்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...