முல்லைத்தீவில் வறட்சியால் வாடும் மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

 

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கேப்பாப்புலவு சூரிபுரம், பிரம்படி மற்றும் பிலக் குடியிருப்பு போன்ற பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

 

இதேபோன்று ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் இராணுவத்தினர் பவுசர் மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...