நாட்டில் மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சுக்களில் சீராக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம்,உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.