யாருக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி உண்டு

Date:

நாட்டில் தற்போது பரவி வரும் புதியவகை வைரஸ் காரணமாக திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணத்திற்காக உரிய ஆவணங்களை சமர்பித்ததன் பிற்பாடு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வின் போது மணமக்கள் இரண்டு மாகாணங்களில் இருப்பின் ஒரு தரப்பினருக்கு அடுத்த மாகாணத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மணமக்களின் பெற்றோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன் வேறு எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...