பெண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் வாகனம் ஒன்று நேற்று (06) மாலை கிருலபனை பூர்வாராம ரயில் கடவையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த மோட்டார் வாகனத்தில் மேலும் ஒரு பெண் பயணித்துள்ள நிலையில் குறித்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுகேகொடை ரயில் நிலையத்தினால் ரயில் கடவை கேட்டை மூடுவதற்கான உரிய சமிக்ஞை பெற்றுக் கொடுக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் மோட்டார் வாகனம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.கொள்ளுபிட்டியில் வேலைத் தளத்தில் இருந்து மஹரகமவில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது குறித்த இரு பெண்களும் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கொழும்பில் இருந்து பாதுக்கை நோக்கி பயணித்த ரயில் ஒன்றிலேயே குறித்த மோட்டார் வாகனம் மோதியுள்ளது.
விபத்தில் சுமார் 8 அடி தூரம் மோட்டார் வாகனம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.