வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் நபர்கள், கொவிட் தடுப்பூசியின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றிருந்தால் அவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளனர்.