இலங்கையில் அரங்கேறிய உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோவிடம் சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதாக சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானிஅபயசேகர தெரிவித்திருந்தார் என ஹரின்பெர்ணாண்டோ தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
புலனாய்வு பிரிவை சேர்ந்த அந்த நபரை சிஐடியினர் கைதுசெய்து விசாரணை செய்தனர்,எனினும் இராணுவபுலனாய்வு பிரிவினர் அவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என ஹரீன்பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலேயே சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.