கடந்த 7-ஆம் திகதி ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனி விமானம் மூலம் ஹைதிக்குள் நுழைந்த நபர் Christian Emmanuel Sanon என்று அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அதிபர் கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Christian Emmanuel Sanon வீட்டில் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க பிரிவின் சின்னம் பொறித்த தொப்பி, துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.