37 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது!

Date:

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

வடக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட வேளையில் கடற்படையின் வடக்கு கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

சர்வதேச கடல் எல்லைக் கோட்டு பகுதியில் இருந்து நாட்டிற்குள் கடத்த நினைத்து கடத்தல் காரர்கள் படகிற்குள் கஞ்சாவை வைத்திருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் வசிக்கும் 20 தொடக்கம் 40 வயதுடையவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...