அடுத்த மாதம் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வரவுள்ளது

Date:

இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளன.இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெறும் ஆகக்கூடியளவான தடுப்பூசி தொகை இதுவாகும்.

ஆகஸ்ட் மாதம் 4 – 8 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாக உயர்வடையவுள்ளது.

இவற்றில் 27 இலட்சம் தடுப்பூசிகள் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...