இந்தோனேசியாவில் ஒரேநாளில் கொரோனா வைரசினால் ஆயிரம் பேர் மரணம்!

Date:

இந்தோனேசியாவில் முதல்தடவையாக கொரோனாவைரசினால் ஒரே நாளில் நேற்று ( புதன்கிழமை) ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவாவில் மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க கூடிய எல்லையை கடந்துவிட்டதோடு ,ஆறுநகரங்களில் ஒக்சிசனிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதேவேளை இந்தோனேசியாவின் பல பகுதிகளில் புதிதாக வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

சிவப்பு வலயங்கள் என குறிக்கப்படும் பகுதிகளில் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வரும் அதிகாரிகள் பொதுமக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுபாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஜாவா பாலி தீவுகளில் பெருமளவிற்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பப்புவா சுமத்திராவில் பாரிய நோய் பரவல் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பிராந்தியங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை 34379 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 1040 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...