நேற்றைய தினம் (29) , இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் கணக்கிடப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இலங்கை உலகில் முதலிடத்தில் இருப்பது ஒரு பெரிய சாதனை என ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த மகத்தான இலக்கை அடைய அர்ப்பணித்த சுகாதார அமைச்சு, முப்படைகள் மற்றும் பிற அனைத்து துறைகளின் சேவையையும் பாராட்டியுள்ளது.
