உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம்

Date:

உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8000 ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறினார். இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுதொர்பாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் மேலும் தெரிவிக்கையில் இவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மக்கள் நலனை முன்நிலைப்படுத்தி செயல்படும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவொரு சவால் ஏற்பட்டாலும், மக்களுக்காக தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என்றும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...