மன்னாரிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோர் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை மற்றும் கடல் நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னாரிலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.இந்த பகுதிகளில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் இந்த கால நிலை இன்று 9.30மணிவரை காணப்படும் என்றும் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்ட விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.