கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து பொய்யைப் பரப்புவதில் பேஸ்புக் போன்ற தளங்களின் பங்கு குறித்து வெள்ளை மாளிகையில்நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
எங்களிடம் உள்ள ஒரே தொற்றுநோய், கண்டறியப்படாதவர்களிடையே உள்ளது என்வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவலை பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு பைடனின் கருத்துக்கள் வந்துள்ளன.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி, பேஸ்புக் மற்றும் பிற தளங்கள் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிகாரிகள், தடுப்பூசிகள் காரணமாக வைரஸிலிருந்து இறப்புகள் மற்றும் கடுமையான நோய்கள் முற்றிலும் தடுக்கக்கூடியவை என்று அறிவுறுத்தினர்.