நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கல்வி சேவைகளுக்காக புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக
ஊடகத்துறை அமைச்சரும்,
ஊடகப்பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் தரம் 1 முதல் 13 வரையான வகுப்புகளுக்காக 13
தொலைக்காட்சி
அலைவரிசைகளும், பிரிவெனா கல்விக்காக 2 தொலைக்காட்சி
அலைவரிசைகளும்
ஆரம்பிக்கப்படவுள்ளன. அண்மையில் கண்டி, குண்டசாலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற
சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், சமுர்த்தி சௌபாக்கிய நிகழ்ச்சித்திட்டத்துடன், உயர்தர வகுப்பு மாணவர் ஒருவருக்காக
மாதாந்தம் தலா 1, 500 ரூபா வீதம், இரண்டு வருடங்களுக்கு நிதியுதவி
வழங்கும் நிகழ்வொன்றும்
இடம்பெற்றது.
இந்த திட்டத்தின் ஊடாக மாணவர் ஒருவருக்காக 10 மாதங்களுக்கான
நிதியுதவியாக தலா 15, 000 ரூபா வழங்கி வைக்கப்பட்டது
நாட்டின் மாணவர்களினது கல்வியை வீழ்ச்சியடைய செய்யாமல்
கவனித்துக்கொள்வது
அரசாங்கத்தினது கடமையாகும்
எனத் தெரிவித்த அமைச்சர், கல்வி
ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றும் எந்த சவால்கள் வந்தாலும் அதனை
நிவர்த்திக்கும் பொறுப்பை
அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்
எனவும் தெரிவித்தார்.