களுத்துறை மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

நாட்டின் காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் இதுவரை 150 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தெஹியோவிட, ருவான்வெல்லை, சீதாவத, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களில் உள்ள களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...