காரைத் தீவு தவிசாளருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!

Date:

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் Krishnapillai Jeyasril எனும் தனது முகநூலில் இஸ்லாம் மார்க்கத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களை உலகின் முதலாவது சிறுவர் துஷ்ப்பிரயோகி என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுத்தீன் என்பவர் சொல்லியுள்ளதாக Reginold Rgi எனும் ஆள் அடையாளமற்ற முகநூலில் பிரசுரித்திருந்த ஒரு முகநூல் பதிவை பகிர்வு செய்ததன் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.இதற்கு எதிராக வழக்கறிஞர் எம். ஐ முஹம்மத் றணூஸ் சட்டநடவடிக்கை எடுக்க முறைப்பாட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பொறுப்பதிகாரி,

பொலீஸ் நிலையம்,

சம்மாந்துறை.

2021.07.30

இலக்கம் 400B /1, கல்லரிச்சல் – 02,சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் எம் ஐ முஹம்மத் றணூஸ் மற்றும் இலக்கம் 160/A ,வைத்தியசாலை வீதி,சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் Dr. ஐ எல் அப்துல் மஜீத் ஆகிய நாங்கள் குற்றவியல் விசாரணையின் தகுதி வாய்ந்த அதிகார நிறுவனமான இலங்கைப் பொலீஸ் திணைக்களத்துக்கு தரும் முறையாக, சம்மாந்துறைப் பொலீஸ் நிலையத்தில் செய்ய விரும்பும் முறையீடாவது,

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் Krishnapillai Jeyasril எனும் தனது முகநூலில் இஸ்லாம் மார்க்கத்தில் இறைத்தூதர் என அழைக்கப்படும் உலக முஸ்லிம்களால் இறைவன் என நம்பப்படும் அல்லாஹ்வுக்கு அடுத்த இஸ்தானத்தில் நேசிக்கப்படும் முஹம்மத் நபி அவர்களை உலகின் முதலாவது சிறுவர் துஷ்ப்பிரயோகி என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுத்தீன் என்பவர் சொல்லியுள்ளதாக Reginold Rgi எனும் ஆள் அடையாளமற்ற முகநூலில் பிரசுரித்திருந்த ஒரு முகநூல் பதிவை பகிர்வு செய்ததன் மூலமாக

இலங்கை #அரசியலமைப்பின்_உறுப்புரை_10_மற்றும்_14(1)(e) மற்றும் 15(2) போன்றவைகளை மீறியுள்ளதுடன்

#இலங்கை_தண்டனைச்_சட்டக்கோவையின்_பிரிவுகளான_291(a ), 291(b ) மற்றும் பிரிவு 292 ஆகியவற்றின் கீழும்

#Prevention_of_Terrorism (Temporary Provisions) Act No. 48 of 1979 ன் பிரிவு 2 (1) (h) ன் படியும்

மேலும் #International_Covenant_on_Civil_and_Political #Rights(ICCPR) Act 2007இன் உறுப்புரை 3(1) ன் படியும் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றைப் புரிந்துள்ளார்.

ஆதாரம் முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுத்தீன் அவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரால் குறித்த கருத்து வெளிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்பதனை மிகத் தெளிவாக அறிந்திருந்தும் மேற்படி பதிவை அவர் பகிர்ந்தமையானது வேண்டுமென்றே அவர் குறித்த செயலைச் செய்துள்ளார் என அறிய முடிகிறது.

இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக எங்களது முறையீட்டைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வண்ணம் உண்மையுள்ள,

எம் ஐ முஹம்மத் றணூஸ் BA, LLB (Hons)

Dr ஐ எல் அப்துல் மஜீத் RAMP.

 

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...