கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ஊர்தி விபத்து | 13 பேர் உடல் கருகி பலி

Date:

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ஊர்தி மற்றொரு ஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தலைநகர் நைரோபியின் வடமேற்குப் பகுதியில் உகாண்டா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள கிஸூமு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் எரிபொருளை பிடிப்பதற்காக கேன்களுடன் சென்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஊர்தியில் தீப்பற்றியது. இந்த விபத்தில் 13 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 24 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...