அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துத்துமாக இருந்தால் அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், அறிவார்ந்த மகா சங்கம், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூக அமைப்புகள், பிற அரசியல் கட்சிகள் மற்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிப்போம் என ஐக்கி மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம் 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கேடட் அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாகவும், இலங்கையில் உயர் கல்வி கற்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.