கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு 1, 2, 3, 7, 8, 9, மற்றும் கொழும்பு 10,11 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.