சர்வதேச ஊடகங்களில் பேசப்படும் இலங்கையின் இணையவழி கல்விமுறை

Date:

இலங்கையில் இணையவழி கற்கையில் இணைந்துகொள்வதற்காக சில கிராம பகுதிகக்ளைச் சேர்ந்த மாணவர்கள் அடர்த்தியான புதர்கள் ஊடாக, சிறுத்தைகள் யானைகளை கடந்து மூன்று கிலோமீற்றர் தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. பொகிட்டிவாயவை சேர்ந்த ஆசிரியையும் 45 மாணவர்களும் இணைய சிக்னலை பெறுவதற்காக உயரமான பாறையொன்றின் மீது ஏறுகின்றனர்.
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளிற்கு செல்லமுடியாத தனது மாணவர்களிற்கான பாடங்களை கற்பிப்பதற்காக தகவல்தொழில்நுட்ப ஆசிரியை நிமாலி அனுருதிக இவ்வாறு சிக்னல்களை பயன்படுத்துகின்றார். அந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் ஆசிரியரின் இணையபாடங்களை பெற்றுக்கொள்வதற்காக அந்த ஆபத்தான பயணங்களைமேற்கொள்கின்றனர். அது மட்டுமன்றி அவர்கள் அனைவரிடமும் கையடக்க தொலைபேசியோ அல்லது மடிக்கணிணியோ இல்லை. நான்கு ஐந்து சிறுவர்கள் ஒரே கையடக்க தொலைபேசியை அல்லது மடிக்கணிணியை பயன்படுத்துகின்றனர்.
மேலும், அவர்களின் பெற்றோர்கள் அநேகமானோர் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் – அவர்களும்தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உயரமான பாறைகளை நோக்கி செல்கின்றனர். தனது ஆறாம்வகுப்பு மகனுடன் செல்லும் எச்எம் பத்மினிகுமாரி சிறுவர்கள் நாளொன்றிற்கு இரண்டு தரம் உயரமான மரங்களில் ஏறுகின்றனர் இது தங்களிற்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
அந்த கிராமம் அடிப்படை வசதிகள் அற்றதாக காணப்படுகின்றது,அந்த கிராமத்தின் பிள்ளைகள் 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கின்றனர் அந்த பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளது. லுனுகலவில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடர்ந்த காட்டில் உள்ள மர உச்சிக்கு அழைத்து செல்கின்றனர்.அந்த மரம் 30 அடி உயரமானதாக காணப்படுகின்றது,அதிலிருந்தாலே இணைய வசதிகளை பெறமுடியும்.அவர்கள் ஒவ்வொவராக தங்கள் பாடங்களை பதிவேற்றிக்கொள்கின்றனர்.
அல் ஜசீரா 

Popular

More like this
Related

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...