சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் கடமை | சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே

Date:

நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் என எப்படி அழைத்தாலும் அனைத்தும் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளே அவற்றை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் பொறுப்பு என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகத்தினை வெறுமனே எதிர்ப்பதற்கு அப்பால் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமொன்று அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தினை பொறுப்புணர்வுடனும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் குறித்த செய்திகளை அடிக்கடி கடந்தகாலங்களில் வாசித்திருக்கின்றோம் செவிமடுத்திருக்கின்றோம்,ஆனால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர சிறுவர்கள் மீண்டும் அந்த துயரத்திற்குள் சிக்குவததை தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான திட்டமிட்ட கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் போன்றவை சிறுவர்கள் நீண்டகால உளவியல் பாதிப்பு மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சமூகம் செயல்இழக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...