சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிட விசேட தொலைபேசி இலக்கம்!

Date:

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கண்காணிக்கும் நிறுவனங்களுக்கு 15 வீதமான முறைப்பாடுகளே கிடைப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழ்நிலையில் வீடுகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றன. இது பற்றிய தகவல்கள் உரிய வகையில் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறினார்.

சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை உரிய தரப்பிற்கு வழங்குமாறு சிறுவர் அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...