தனுஷ்க, குசல், திக்வெல்லவின் துர்நடத்தை குறித்து விசாரிக்க ஐவரடங்கிய குழு நியமனம்!

Date:

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, துர்நடத்தைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஐவரடங்கிய குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயிர்குமிழி நடைமுறைக்கு முரணான வகையில் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் தொடர்பில் இந்த குழாம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த மேற்படி மூன்று வீரர்களும், உயிர்குமிழி நடைமுறையை மீறியமை தொடர்பில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்ட காணொளியொன்றின் ஊடாக நிரூபணமானது.

இதனையடுத்து, குறித்த வீரர்கள் மூவரையும் நாட்டுக்கு உடனடியாக திருப்பியழைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...