தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா என்பவற்றை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மே மாதம் முதல் குறித்த இடங்கள் மூடப்பட்டிருந்தன.இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தெஹிவளை மிருகக்காட்சி சாலை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்பதுடன், ரிதியகம சபாரி பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.