நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்தடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் களு, களனி, கின், நில்வள கங்கைகளை அண்மித்த மற்றும் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்து செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.பி சுகீஸ்வர இதனை தெரிவித்துள்ளார்.
கங்கைகளை அண்மித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை கடும் மழையுடனான வானிலை காரணமாக ஏற்படக் கூடிய வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் நிவாரணம் வழங்குவதற்காக களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு கடற்படையின் நிவாரணக்குழு அனுப்பபட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக 37 நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.