நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித் துள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்குச் சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத் தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகுவதால் எதிர்காலத்தில் நாட்டின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகள் மிகவும் உதவியற்றவர்களாகி விடுவார் கள் என ஊரு வரிகே வன்னிலஅத்தோ தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் மிக விரைவாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.