பசில் வந்த பின்னர் நாமல் ஜனாதிபதியானால்தான் முடியும் என்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,
கோத்தபாய வந்தால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றனர் அவரை மக்கள் ஜனாதிபதியாக்கினார்.அதன்பின் வியத்மகவும் 2/3 பெரும்பான்மையும் உம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்றனர்.அதனையும் மக்கள் வழங்கினார்.
அதன்பின் இருபது இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்றனர்
அதுவும் நிறைவேற்றப்பட்டது .இவ்வாறு அவர்கள் கேட்ட அத்தனையும் வழங்கியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்போது பசில் இல்லாமல் முடியாது என்கின்றனர்.இதன்பின் நாமல் இல்லாமல் முடியாது.அவர் ஜனாதிபதியாகவேண்டும். சசீந்தர ராஜபக்ஸ இல்லாமல் முடியாது என கூறாமல் இலங்கையில் உள்ள அத்தனை ராஜபக்சக்களையும் பசிலுடன் சேர்த்து கொண்டுவந்தாவது நாட்டை கட்டியெழுப்புங்கள் ஆனால் இவர்கள் யார் வந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப ராஜபக்ஸக்களால் முடியாது.ஏன் எனில் நாட்டை சீரழித்ததே அவர்கள்தான்.
பசில் வந்தால்தான் முடியும் என்பதில் இருந்து ஜனாதிபதியும் அரசும் பெய்ல் என்பதை அவர்களே மறைமுகமாக ஒப்புக்கொண்டுவிட்டனர் என தெரிவித்தார்.