பிணை முறி திருடர்கள்,மதுபான கடத்தல்காரர்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

Date:

பிணை முறிகள் பணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் யாரும் அடிபணிய மாட்டார்கள் என்றும் மக்களின் அபிலாஷைகளுக்கே துணை நிற்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின்’எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் திரு.சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியாக செயற்பட்டுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ திட்டத்தின் 20 ஆவது கட்டமாக இருபத்தி மூன்று மில்லியன் இருபதாயிரம் ரூபா (2,320,000.00)

மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரத்தை மன்னார் மாவட்ட மருத்துவமனையின் பனிப்பாளர் வைத்தியர் கே. செந்தூர்பதிராஜாவுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று(06) பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ராஜித சேனரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம்,சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...