போராட்டங்கள் ஒரு உயிர்புள்ள ஜனநாயக சமூகத்தில் அவசியம் இருக்கும்-நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

எதிர்ப்பை வெளிப்படுத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய மனித உரிமையாகும். குடிமக்களின் பேச்சுச் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு வழியாக போராட்டங்களை சுட்டிக்காட்டலாம்.

போராட்டங்கள் ஒரு உயிர்புள்ள ஜனநாயக சமூகத்தில் அவசியம் இருக்கும்,இருக்க வேண்டிய ஓர் விடயமாகும்.

வரலாறு முழுவதும் நேர்மறையான சமூக மாற்றத்திற்காக பேராட்டங்கள் அளித்த ஊக்கத்தின் ஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் மேற்கோள் காட்டலாம்.

சர்வதிகார ஆட்சிகள் மற்றும் முடியாட்சிகள் என்பவற்றின் தோல்விகளின் வரலாற்றைப் பார்க்கும்போது இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

எதிர்ப்பை வெளிப்படுத்தல் எனும் விடயம் ஒரு ஜனநாயக சமூகத்தின் முன்னேற்றத்திற்கு குடிமக்கள் நேரடியாக பங்களிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்.ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் நேரடி பிரதிநிதித்துவத்தில் ஈடுபட முடியாத ஒரு குடிமக்கள் குழுவிற்கு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில் இதற்கான இடம் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

ஒருநாட்டின் நடப்பு ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை,அந்த ஆட்சிக்கு ஒரு சவாலாகவோ அல்லது சங்கடமாகவோ பார்த்தாலும், குடிமக்கள் தங்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.

கோவிட் 19 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும், குடிமக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமையை இயற்கையே தடை செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...