முஸ்லிம்களின் சமூக உயர்வுக்காக பணியாற்றிய அஷ்ரப் ஹுஸைன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு!

Date:

சர்வதேச வை.எம்.எம்.ஏ எனும் இயக்கத்தை உருவாக்கி சமூக சிந்தனையுடன் பொதுப்பணி யில் ஈடுபட்டு மக்கள் மனம் கவர்ந்த மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் மரணித்தாலும் அவர் செய்த நற் பணிகளால் மக்கள் மனங்களில் இன்றும் உயிர் வாழ் கிறார்.

அஷ்ரப் ஹுஸைன் மரணித்து ஐந்து ஆண்டுகள் (16.07.2021) கடந்து விட்டன. அவர் உறவினர்கள், நண்பர்களினால் நினைவு கூரப்பட்டார். மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் ஏற்படுத்திய சமூகநல இயக்கங் கள் இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

திஹாரிய அங்கவீனர்களுக்கான நிலையம். சர் வதேச வை.எம். எம்.ஏ. கொழும்பு ஜனாஸா நலன்புரி அமைப்பு என பல அமைப்புகளின் பங்களிப்புடன் சமூகத் தொண்டுகள் புரிந்து வழிகாட்டிய மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள்

அளப்பரியன. கொழும்பு மாவட்டத்தில் மட் டுமல்ல பல மாகா ணங்களிலும் பணி

புரிந்தவர் அவர். ஏழைகளுக்கும் வறிய மாணவர் களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பண உதவிகள் செய்தார்.

சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆய் வுகள் செய்து தீர்வு பெற்றுக் கொடுத்து ஒர் இணக்கப் பாட்டை காணும் திறமை அவரிடம் இருந்தது. தனக் கென்று வாழாமல் பிறர் நலன் பேணுவதில் அவர் இன்பம் கண்டார்.

அரசியலில் ஒரு பக்கம் சாராமல் நடுநிலையாக செயற்படுவார். பெரும்பான்மைக் கட்சிகளிடம் இவருக்கு நன்மதிப்பு இருந்தது. எல்லோரிடமும் அன்பாக, பண்பாக, நியாயமாக பேசுவார். எல்லா இன மக்களும் அவரை விரும்பினர்.

மத நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் வெளிப்படுத்த பெருநாள் மற்றும் விசேட நாட்க ளில் பெரும்பான்மை மக்களுக்கு விருந்தோம்பல் செய்வார். மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைனின் பணிகள் எண்ணிலடங்காதவையாகும்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...