மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

Date:

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகு வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

அதற்கமைய, கேகாலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதி

கேகாலை மாவட்டத்தின் கேகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம்

 

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை அதிகாரப்பிரிவின் மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இலுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...