யானைப் பசியுடன் காத்திருந்த மக்களுக்கு சோளப்பொரியையாவது வழங்காத நிலைப்பாட்டில் ஜனாதிபதியின் உரை அமைந்தது – இம்ரான் மஹ்ரூப் காட்டம்

Date:

பல வாரங்களாக முடக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் இன்று மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி இருக்கின்றனர். அவற்றை ஜனாதிபதி உரையில் உள்வாங்குவார் என்று மக்கள் எதிர்பார்த்த போதும் அது நிறைவேறவில்லை. அவரது உரையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கவில்லை. எனவே யானைப் பசியுடன் காத்திருந்த மக்களுக்கு ஒரு சோளப்பொறியேனும் தராத ஒரு நிலைப்பாடாகவே ஜனாதிபதியின் உரை காணப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

நேற்று(30) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Xpress Perl கப்பல் தீப்பிடித்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கடலாமைகள் இறந்துள்ளன. எத்தனையோ டொல்பின்கள், திமிங்கிலங்கள், மீன் இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தொழில்களை இழந்துள்ளனர். எனினும் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...