அரச வாகனங்கள் தொடர்பான அறிக்கை!

Date:

அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பாக கீழ்வரும் தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையொன்று பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சராக, பிரதமரினால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் காணப்படும் வாகனங்கள் 82,194 ஆகும்.அவற்றில், 76,661 வாகனங்கள் நடப்பில் இயங்குவதுடன், 5533 வாகனங்கள் இயங்கு நிலையற்றதாகக் காணப்படுகின்றது.

இயங்கு நிலையிலுள்ள வாகனங்களில் 33,931 வாகனங்கள் அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களிடமும், அரச வணிக நிறுவனங்களிடம் 26,395 வாகனங்களும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 16,335 வாகனங்களும் காணப்படுகின்றன.

அவ்வாறே, அரச நிறுவனங்களிலுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் 8,500 பேருக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டு அவர்களின் பிரத்தியேக மோட்டார் வாகனங்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி தகவல்களைக் கருத்தில் கொண்டு தற்போது இயங்கு நிலையில் அல்லாத வாகனங்களில் திருத்தம் செய்யக்கூடிய வாகனங்களைத் துரிதமாக திருத்தம் செய்து பாவனைக்குட்படுத்தவும், திருத்தம் செய்ய முடியாத வாகனங்களை முறையான பெறுகைக் கோரலை பின்பற்றி தாமதிக்காமல் அகற்றுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...