ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன்!

Date:

பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டார்.

அதற்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

2021 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...