இலங்கைக்கும்-கட்டாருக்குமிடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை!

Date:

கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூரிற்கும் புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கும் இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தை ஒன்று கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இதனை இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் போது அரச விஜயங்களால் வலுவூட்டப்பட்ட கட்டார் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நினைவுகூர்ந்தார்.

பொருளாதார வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார் அத்தோடு துறைமுக நகர விஷேட பொருளாதார வலயம், சர்வதேச நிதி நிலையம், சுற்றுலாத் துறை மற்றும் எரிசக்தித் துறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை ஆராய்வதற்காக தூதுவர் சொரூருக்கு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்தார்.

அமைச்சர் பீரிஸின் கருத்துக்களை வரவேற்ற தூதுவர் சொரூர், தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தி கூறினார். சவாலான நேரத்தில் அவசர சுகாதாரத் துறைத் தேவைகளை நீடித்து உதவ கட்டார் அரசாங்கம் தயாராக இருக்கின்றமைக்காக அமைச்சர் பீரிஸ் தனது நன்றிகளை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் இலங்கை அரசாங்கததிற்கு கட்டார் அரசாங்கம் அளித்த உறுதியான ஆதரவையும்

கட்டார் அரசின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காக கட்டாரில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்தின் மதிப்புமிக்க பங்களிப்புக்களை தூதுவர் சொரூர் பதிவு செய்ததுடன், இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு கட்டார் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையேயான வணிகப் பிரதிநிதிகளின் வழக்கமான பரிமாற்றங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாட்சியை மேலும் விரிவாக்க உதவும் எனவும் இருவரும் கலந்துரையாடினார்கள்.

 

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...