இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் வெளியானது!

Date:

நாட்டில் சமீப காலமாக பதிவாகும் சிறு நிலநடுக்கங்களின் பெரும்பாலானவை மத்திய மலைநாட்டில் கட்டப்பட்டுள்ள பாரிய நீர்த்தேக்கங்களால் ஏற்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மற்றும் ரந்தெனிகல பகுதிகளின் உட்புறத்தில் பல விரிசல்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் நாட்டில் அடிக்கடி பதிவாகினாலும், பூகம்பங்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன.இருப்பினும், இது போன்ற பல்வேறு நிலநடுக்கங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...