இலங்கையில் மூன்று வகையான டெல்டா வைரஸ் திரிபுகள் | இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன

Date:

இலங்கையில் மூன்று விதமான டெல்டா திரிபுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

நாட்டிற்குள் தற்போது டெல்டா வைரஸானது, 60 முதல் 70 வீத வேகத்தில் பரவி வருகின்றமையை, விசேட நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்ற மற்றும் ஒக்சிஜனுடன் போராட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும் வீரியம் கொண்ட வைரஸ் இதுவென அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டாவின் மூன்று வகை திரிபுகளினாலேயே, பாதிப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...